கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட களமருதூர் ஊராட்சியில் உள்ள காலணி பகுதிக்கு போதியளவு குடிநீர் வராததால் இன்று அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் வராததால், இன்று காலை அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர், அப்பொழுது அவ்வழியாக சென்ற நகர பேருந்தை சிறை பிடித்தனர்.
இத்தகவல் அறிந்த திருநாவலூர் காவல்துறையினர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொது மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக குடிதண்ணீர் வசதி செய்து தருவதாக கூறியதின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.