திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு  அரசு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக உளுந்தூர்பேட்டை  சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கலந்து கொண்டு, ரூபாய் 6 லட்சத்து 72 ஆயிரத்து 750 மதிப்பீட்டில், 130 இலவச மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வன், பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோதை மற்றும் ஆசிரியர்கள் பாலகுரு, சத்தியமூர்த்தி, ராஜசேகரன், அன்பு சோழன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 2 =