திருநாவலூர் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோதை தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாளராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, மாணவர்களுக்கு  அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் போது திருநாவலூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ்  மாவட்ட குழு உறுப்பினர் சந்திரசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பத்மநாபன், பள்ளி மேலாண்மை குழு கபாகாந்தி, திருநாவலூர் ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு காசிநாதன், சேந்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் உமா சந்திரகாசன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.