திருச்சி விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து 4 விமானங்களில் வந்த 60 பயணிகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. அதில் 57 பயணிகள் நகைகள் மற்றும் பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான 10.200 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் எந்தெந்த பகுதியில் இருந்து கடத்தப்பட்டது என குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 3