திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு ஐஜி பாராட்டு

திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதியை வழங்கினார் திருச்சி சரக காவல் துறைத்தலைவர் ஐஜி பாலகிருஷ்ணன்

திருச்சியில் காவல்துறையில்
சிறப்பாக பணியாற்றிய பல்வேறு பகுதியை சேர்ந்த காவலர்களுக்கு
மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

திருமயம் காவல் உதவி ஆய்வாளர் வீரமணி, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் முதல் நிலைக்காவலர்கள் 1205 வினோத், 1511 கணேசன், ஆயுதப்படை காவலர்கள் நெப்போலியன், ரபேல்தாஸ் மற்றும் சரவணகுமார் ஆகியோரை உள்ளடக்கிய  தனிப்படையினர் கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலைய எல்லைப்பகுதியில் கடந்த 11.08.2021 அன்று வாகனச் சோதனை நடத்தி  மணல் கடத்தலில் ஈடுபட்ட  2 ஜே.சி.பி. வாகனங்கள் மற்றும் 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர். 
அதே போன்று குன்னம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன், பெரம்பலுர் மாவட்டம் மற்றும்  தகா 1464 மாரிமுத்து, முதல் நிலைக்காவலர் 662, கார்த்திகேயன், காவலர் 268, மணிகண்டன் மற்றும் முதல் நிலைக்காவலர் 1355 தினேஷ்குமார் ஆகியோரை உள்ளடக்கிய தனிப்படையினர் கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைப்பகுதியில் கடந்த 11.08.2021 அன்று வாகனச் சோதனை நடத்தி  மணல் கடத்தலில் ஈடுபட்ட  2 ஜே.சி.பி. வாகனங்கள் மற்றும் 4 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்படி மணல் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து வாகனங்களை கைப்பற்றி சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரின் செயலை பாராட்டும் வகையில் இன்று மத்திய மண்டல காவல்துறை தலைவர்  பாலகிருஷ்ணன் அவர்கள் காவலர்களை  நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 7 =