திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா முன்னிட்டு விளையாட்டு போட்டி

பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை  துவங்கப்பட்டு நூற்றாண்டு ஆனதை முன்னிட்டு மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமையில் கல்லுக்குழி இரயில் வேவிளையாட்டு  மைதானத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கான தடகளப்போட்டி, கிரிக்கெட்போட்டி மற்றும் கபடிபோட்டிகளை நகராட்சி நிருவாகத்துறைஅமைச்சர் தொடங்கி வைத்தார்.

பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புமருந்துதுறையின் நூற்றாண்டினை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு தீபம் கொண்டு செல்லப்படுகின்றது. அதனடிப்படையில், 26.11.2022 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு அந்த தீபம் வருகை தரவுள்ளது.

இன்று நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் நபர்களுக்கு 26.11.2022 அன்று நூற்றாண்டுவிழாவுக்கான தீபத்தை வரவேற்கும் நிகழ்ச்சியில் பரிசுவழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,வருவாய் கோட்டாட்சியர் கோ.தவச்செல்வம்,துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.சுப்ரமணியன்,வட்டாட்சியர் சித்ரா,மாவட்டப் பிரமுகர் க.வைரமணி,மருத்துவர்கள் மற்றும் மருத்துவபணியாளர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 8 =