திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு உயர் கல்வி போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக வருகின்ற 11.07.2022 முதல் 15.07.2022 வரை “தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும், திறன் வாரம்”மற்றும் 15.07.2021 அன்று “தேசிய திறன் நாள்” அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள், மகளிர், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு உயர் கல்வி, போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மெய்நிகர் கற்றல் வலை தளத்தில் பதிவு செய்தல், மென்பாடங்களை தரவிறக்கம் செய்தல், கல்வி தொலைக்காட்சி, Youtube channel – TN Career Services Employment, திறன்பயிற்சி மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

மேலும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் மூலமாக முன்கற்ற தொழில் நுட்பம் அறிந்தவர்களில் உரிய சான்றுகள் இல்லாதோரை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அரசு சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்ட இளைஞர்கள் இந்நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 0431-2413510 என்ற மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார்  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 3 =