திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார்  தலைமையில் இன்று   நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டாமாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்பஅட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படைவசதிகள், திருமணஉதவித் தொகை,பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 441 மனுக்கள்  பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்,முதலமைச்சரின்  நிவாரணநிதியின் கீழ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த  3 பேர், பாம்புகடித்து உயிரிழந்த 1 நபர் என உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 4 லட்சத்திற்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வேண்டி விண்ணப்பம் அளித்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையினையும், தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரிய அடையாள அட்டை 20 நபர்களுக்கும், முதியோர் உதவித் தொகை வேண்டி மனு அளித்த முதியவருக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இம்முதியவருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்டவருவாய்  அலுவலர் இரா.அபிராமி, சமூகபாதுகாப்புத்  திட்ட தனித்துணை ஆட்சியர் சி.அம்பிகாபதி, பழங்குடியினர்  நலதிட்ட அலுவலர் கீதா ஆகியோர் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 6 =