திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது காட்டுமிராண்டிதனமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, கட்சி அலுவலகங்கள், பத்திரிகை அலுவலகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதிகுழு செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்பட வெகுஜன அரங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.