திருச்சியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறிய விபத்தில் 3 பேர் பலி

திருச்சியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் பலியாகினர்.

திருச்சி ஸ்ரீரங்கம், அம்மாமண்டபம் கீதாபுரம் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் யாசகர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்த தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் காரை ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரம் உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக காரை பொதுமக்கள் அடித்து உடைத்தனர். நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

33 − = 23