திருச்சியில் தயாரிக்கப்பட்ட குளிர்பானத்தில் தேதிகள் குறிப்பிடப்படாததால் குளிர்பானங்கள் பறிமுதல்

திருச்சியில் தயாரிக்கப்பட்டு வரும் குளிர்பான கம்பெனியில் 3000 லிட்டர் குளிர்பானம் தயாரித்த தேதி மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாமல் இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி பீம நகரில் உள்ள ஒரு குளிர்பாணம் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் தயாரிக்கபட்ட 3000 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யபட்டு வழக்கு போடுவதற்காக ஒரு சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கபட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடதிற்க்கு அனுப்பி வைக்கபட்டது.இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறுகையில் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் சட்டம் 2006 ன் படி கடுமையான நடவிடக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேற்கண்ட கம்பெனியிலிருந்து தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் திருச்சி மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டுள்ளது அந்த குளிர்பானங்களை அருந்திய யாருக்கேனும் தொந்தரவுகள் ஏற்பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர்.