திருக்கோவிலூரில் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை படி எடுத்து படிக்க மாணவர்களுக்கு பயிற்சி வழங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில், தொல்லியல் துறை சார்பில், திருக்கோவிலூர் அகழ்வைப்பகமும், கள்ளக்குறிச்சி வரலாற்று ஆய்வு நடுவம் மற்றும் கபிலர் தொன்மை ஆய்வு மையமும் இணைந்து உலக மரபு வார விழாவை இம்மாதம் 19ம் தேதி முதல் பல்வேறு தொல்லியல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக திருக்கோவிலூரில் உள்ள அங்கவை, சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும், கல்வெட்டு பட்டப்படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கும்,  கீழையூர் வீரட்டேசுவரர் ஆலயத்தில் கருவறைச் சுற்றுச்சுவரில் உள்ள கல்வெட்டுகளை படி எடுத்து படிக்கும் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தொல்லியல் அலுவலர் பாக்கியலட்சுமி தலைமையில், தலைமையாசிரியர் ஜெயஸ்ரீ முன்னிலையில்,  கபிலர் தொன்மை மையத் தலைவர் சிங்கார உதியன்,  விழுப்புரம் வீரராகவன், காப்பாட்சியர் ரஷீத்கான் ஆகியோர் மாணவிகளுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி அளித்தனர்.

இப்பயிற்சியில் பள்ளி மாணவிகள் 60 பேரும்,  கல்வெட்டு பட்டப்படிப்பு மாணவிகள் 15 பேரும், 15 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும், பரிசுப்பொருட்கள், பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பயிற்சியின் போது, அன்பழகன், சுந்தரமூர்த்தி,  நகர்மன்றத் துணைத்தலைவர் மகேஸ்வரி குணா,  உதவி தலைமை ஆசிரியர் காமராஜ், ஆசிரியர்கள் ரமேஷ், புவனேஸ்வரி, குமாரி, சொர்ணகாமாட்சி, இந்திராகாந்தி,  மரியசகாயமெஜிலா, ஆடல்அரசி, அல்லி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜெயின்ஆஸ்நாத் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 2 =