திருச்சி தெற்கு மாவட்ட தி மு க வின் சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்கி துண்டுப் பிரசுரத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சத்திரம் பேருந்து நிலையம் முதல் வி. என் நகர் பகுதி வரை நடந்து சென்று பொதுமக்களையும் வியாபாரிகள் மற்றும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பயணிகளை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
நிறைவேற்றப்பட்ட சாதனைகள் கொரோனா விற்கான நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்பட்டது, மகளிருக்கு விலையில்லா பேருந்து பயண திட்டத்தை அறிவித்தது, பத்திரிக்கை ஊடகவியல்லாளர்களை முன்களப்பணியாளர்கள் அறிவித்தது, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக ஆக்கியது, செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஊடகவியலாளர்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்தது, இப்படி நூற்றுக்கு மேற்பட்ட நூறுநாள் சாதனைகளை நிறைவேற்றிய திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாவட்ட பொருளாளர் என் கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன், பாலக்கரை பகுதி கழக செயலாளர் ராஜசேகர் மற்றும் மாவட்ட பகுதி கிளை கழகங்களின் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.