
கள்ளக்குறிச்சி மாவட்டம்இ தியாகதுருகம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த சிறுவன் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த எபினேசர் இமான் வயது 38, இவரது தாயார் மற்றும் 14 வயது சிறுவன் உள்பட 6 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்று நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி சென்ற நிலையிலும் கள்ளக்குறிச்சி மாவட்டம்இ தியாகதுருகம் அருகே புறவழிச்சாலையில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதி ஊனத்துரை சேர்ந்த அழகு ராஜன் வயது 40, ஓட்டி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக பேருந்தின் மீது மோதியதில் கார் பேருந்தில் அடிப்பகுதியில் சிக்கி கோர விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த தியாகதுருகம் காவல்துறையினர் மற்றும் கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்தில் சிக்கி கொண்டு இருந்த காரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் இறந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.