திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் செந்துறை பகுதி அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்

செந்துறை பகுதி அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை தெற்கு ஒன்றியத்தை சார்ந்த அதிமுக பிரமுகர்களான, உஞ்சினி ஊராட்சி மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் பெ.கண்ணன், உஞ்சினி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சிவாஜி ராஜு, ச.வாசன்கீர்த்தி ஆகியோர் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்  முன்னிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், திமுக அரியலூர் மாவட்ட செயலாளருமான, எஸ்.எஸ்.சிவசங்கர்  மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

37 − = 29