திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியானது. கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த பட்டியலை வெளியிட்டார்.
பெரும்பாலும் மூத்த அமைச்சர்கள் ஏற்கனவே அவர்கள் வகித்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருசில அமைசர்களின் பதவிகள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த மூர்த்திக்கு பதிலாக செந்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் செங்கோட்டையனுக்கு பதிலாக மதியழகன், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வரதராஜனுக்கு பதிலாக தளபதி முருகேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சின் அமைப்பு செயலாராக இருந்த ஆர்.எஸ்.பாரதி செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதால் புதிய அமைப்பு செயலாளராக அன்பகன் கலை நியமிக்கப்பட்டுள்ளார். அக்.9-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற இருப்பதாகவும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அதில் கலந்துகொள்ள வேண்டும் என துரைமுருகன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 1 =