திண்டுக்கல் மாவட்ட புதுகை வரலாறு செய்தியாளர் காலமானார்

திண்டுக்கல் மாவட்ட புதுகை வரலாறு நாளிதழின் ஆற்றல்மிக்க செய்தியாளர் சகோதரர் முருகன் திடீர் உடல் நலக்குறைவு  காரணமாக இன்று நம்மை விட்டு மறைந்து விட்டார். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போம், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் புதுகை வரலாறு சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

செய்தியாளர்கள் அனைவரும் எதற்காக உழைக்கின்றோம் என்பதை அறியாமலேயே சிலர் உழைப்பதை இங்கு உணர முடிகின்றது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் உடல் நன்றாக இருந்தால் தான் உழைக்க முடியும், நம் குடும்பத்தையும் காக்க முடியும் என்பதை பாதி பேர் மறந்து விடுகிறீர்கள். இந்த வருத்தமான நேரத்தில் புதுகை வரலாறு சார்பில் சொல்லிக் கொள்வதெல்லாம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தங்கள் உடல்நிலையில் அக்கறை கொண்டு மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் அதுவே உங்களையே நம்பியிருக்கும் உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 7 =