திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மும் மதத்தினை சேர்ந்தவர்கள் பங்கேற்ற விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த இந்த விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். விநாயகர் சிலையை வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிராக மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மும்மதத்தினர் பங்கேற்ற விநாயகர் சிலை வைக்கப்பட்டு பொரி, சுண்டல், அவல் ,கொழுக்கட்டை மற்றும் பழங்கள் ஆகியவை படைக்கப்பட்டு விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த சதுர்த்தி விழாவில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.