திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாலை ஓரங்களில் இறைச்சிக்காக ஆடு வதை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவ சுப்பிரமணியன், விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் ஆடுகளை நவீன ஆட்டிறைச்சி கூடத்தில் மட்டுமே வதை செய்ய வேண்டும். மீறி சாலை ஓரங்கள் மற்றும் கடைகளில் ஆடு வதை செய்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.