தாய் தந்தையுடன் நடிகர் விஜய் வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜய் தனது பெற்றோரை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் முதல் சிங்கிளான ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்த சிங்கிள் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அதேசமயத்தில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடித்து வரும் விஜய், இதன் டெஸ்ட் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றிருந்தார். ஓரிரு தினங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து வந்த நடிகர் விஜய்யின் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் தாய் ஷோபாவையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பின்போது அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குநர் எஸ்.ஏ.சி அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.