தாயை கொலை செய்த மகனுக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே சொத்து பிரச்சினையின் காரணமாக தாயைக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் பரபரப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள மறவம்பட்டியை சேர்ந்த தங்கராசு – திலகராணி தம்பதிகளின் மகன் ஆனந்த்(25).
இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு தந்தை தங்கராசுவை தாய் திலகராணி குடும்ப பிரச்சினையில் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்து விடவே அதன்பின் மகன் தாயை விட்டு பிரிந்து தனியே வசித்துள்ளார்.இந்த வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதிலிருந்து தாய் திலகராணி விடுதலையாகி அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தந்தையின் சொத்து தொடர்பான பிரச்சனையில் தாய் திலகராணி தனக்கு இடையூறு செய்ததாக கூறி,திலகராணியை ஆனந்த் பேருந்து நிறுத்தத்தில் வைத்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து குற்றவாளி ஆனந்திற்கு தாயை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கு தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதி சத்திய தீர்ப்பு வழங்கினார்.இதனையடுத்து குற்றவாளி ஆனந்த் பலத்த பாதுகாப்போடு அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

26 − 16 =