தலையில் கரகம் வைத்து “ரூபிக்ஸ் க்யூப்”பில் புதிய சாதனை அக்கா – தம்பிக்கு ஏசியன் புக் ஆஃப் ரெகார்ட் விருது வழங்கல்!

சென்னை வண்ணாரப்பேட்டை மரகதம் மாளிகையில் ஞாயிறு மாலை 6 மணி அளவில் காலம் சென்ற இரண்டு ரூபாய் மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன் பேரன் பேத்தியான   ,அன்விதா கார்த்திக்,(சர்ச் பார்க் பள்ளி 7ம் வகுப்பு) அனிருத்சாய் கார்த்திக் (கோபாலபுரம் டி ஏ வி பள்ளி 2ம் வகுப்பு) ஆகியோரின் ஏசியன் புக் ஆஃப் ரெகார்ட் “ரூபிக்ஸ் கியூப் “உலக சாதனை நிகழ்ச்சி தொடங்கியது.

கவிஞர் ஜோதி ராமலிங்கம் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் முதலாவதாக விழாவில் விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. முதலாவதாக சிறுமி அன்விதா கார்த்திக் தனது சாதனை நிகழ்வை தொடங்க ஆரம்பித்தார். அவர் பரத நாட்டிய நடன கலைஞர் என்பதால் புதுவிதமாக சாதனை முயற்சியாக தலையில் கரகம் வைத்து, கைகளில் ரூபிக்ஸ் க்யூப் வைத்து 30 நிமிடங்களில் தன் சாதனையை தொடங்கினார்.

ஒன்றன் பின் ஒன்றாக கலைத்து கொடுக்கப்பட்ட “ரூபிக்ஸ் கியூப்” அவரின் விரல்களின் மாயஜாலத்தால் வேகமாக சேர்த்து கொடுத்து கொண்டே இருந்தார். 30 நிமிடங்களில் அவரின் கடுமையான முயற்சியால் 28 (3*3*3) “ரூபிக்ஸ் கியூப்” களை நிறைவு செய்து புதிய ஏசியா புக் ஆப் ரெக்கார்டு சாதனை நிகழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து அவரது தம்பி அனிருத் கார்த்திக் தனது சாதனையை நிகழ்த்த ஆரம்பித்தார். அவரும் மிக நேர்த்தியாக விறு,விறுப்பாக பிரமிட் “ரூபிக்ஸ் கியூப்”களை ஒன்று சேர்த்தார். அவரும் 30 நிமிடங்களில் 7 பிரமிட் “ரூபிக்ஸ் கியூப்”களை சேர்த்து புதிய ஏசியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனையை நிகழ்த்தினார். இதை பார்த்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மக்கள் உறவினர்கள், நண்பர்கள் கைதட்டி தங்கள் பாராட்டை தெரிவித்தனர். இரு பிள்ளைகளையும் வாழ்த்தினார்கள்.

ஏசியா புக் ஆப் ரெக்கார்ட் நிகழ்ச்சி சார்பில் கலந்து கொண்ட ஜட்ஜ் (ஜுரி) விவேக் பேசுகையில், இந்த அன்விதா கார்த்திக், அனிரூத் கார்த்திக், நிகழ்த்தியுள்ள இச்சாதனை இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய ஏசியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனையாகும். இவர்கள் மிகக் குறுகிய காலத்தில் இதை பயிற்சி பெற்று இந்தளவுக்கு சிறப்புடன் சாதனை நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இவர்கள் அடுத்தடுத்து சஃபில், செய்து கொடுத்த   “ரூபிக்ஸ் கியூப்”களை விரைவில் ஒன்று சேர்த்து கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறி ஏசியா புக் ஆப் ரெக்கார்ட் சான்றிதழ், பரிசுக்கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்வில் பங்கேற்றவர்கள் சாதனை குழந்தைகளை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ராயபுரம் எம்.எல்.ஏ., ஐடீரிம்ஸ் மூர்த்தி, புருஷோத்தமன்,  பாலாஜி ஹாஸ்பிடல் டைரக்டர் டாக்டர் பாலாஜி, பேராசிரியர் டாக்டர் குமுதா, டாக்டர் ஏ.ஜி.நர்த்தனா, ராயபுரம் உதவி கமிஷனர் லக்ஷ்மன்,  பத்திரிக்கையாளர் சு.காதர் உசேன், க்யூப் ட்ரைனர் இளைராம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை டாக்டர் வேணி ஜெயசந்திரன், டாக்டர் சரண்யா ஜெயச்சந்திரன், டாக்டர் கார்த்திக், டாக்டர் சரவணன் ஜெயசந்திரன், டாக்டர் சரத் ஜெயச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1