மத்திய பிரதேசத்தின் பலங்ஹட் மாவட்டம் கட்லா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இன்று அதிகாலை, கட்லா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
அவர்கள் சுனிதா, சரிதா காதியா மோச்சா என்பது தெரிய வந்தது. சுனிதா, மாவோயிஸ்டுகளின் பிரிவான போராம் தேவ் கமிட்டியின் கமாண்டர் ஆவார். அவர் பகுதி கமிட்டி உறுப்பினராகவும் இருந்து வந்தார். சரிதா பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்தார். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களின் தலைக்கு தலா ரூ.14 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்லா வனப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.