தரமான விதை உற்பத்தி: விராலிமலை விவசாயிகளுக்கு பயிற்சி

விராலிமலை வட்டாரத்தில் அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டத்தின்கீழ் தரமான விதை உற்பத்தி குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

விராலிமலை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை வேளாண்மை உதவி இயக்குநர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு தரமான விதை உற்பத்தியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தினை விவசாயிகளுக்கு விளக்கியதோடு விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் விதைப்பண்ணை பதிவு செய்யும் முறை. அதை யாரிடம் சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் வயல் தேர்வு, விதை நேர்த்தி, பயிர் விலகு தூரம் மற்றும் பயிர் எண்ணிக்கை பராமரித்தல், விதைச்சான்று அலுவலர் ஆய்வு, கலவன் கண்டறிதல், ஒருங்கிணைந்த உர நிர்வாகம்,  பூச்சிநோய் மேலாண்மை, அறுவடைக்கு பின் விதை சுத்திகரிப்பு செய்து சான்று அட்டை பொறுத்துதல் போன்ற பல்வேறு விதமான தகவல்களை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

இப்பயிற்சிக்கு தலைமையேற்று பேசிய விராலிமலை வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்செல்வி, வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். அதைத் தொடர்ந்து மீன்வளத்துறை மாவட்ட திட்ட மேலாளர் குயிலி சிவக்குமார், பல்வேறு வகையான மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளார் தேவி வரவேற்றார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர் தங்கவேல்முருகன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பாண்டியன் செய்திருந்தனர். வேளாண்மை அலுவலர் ஷீலாராணி நன்றி கூறினார்.

பயிற்சியில், வானதிராயன்பட்டி, தென்னம்பாடி, தேராவூர், மண்டையூர், பொருவாய், மேபூதகுடி, விராலூர் பேராம்பூர், தன்னாங்குடி, ஆலங்குடி, கோமங்களம் வெம்மணி மற்றும் விராலிமலை கிராமத்தை சேர்ந்த விதைப்பண்ணை விவசாயிகள் மற்றும் விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இவ்வாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 6