தரங்கம்பாடி, சந்திரபாடி பகுதியில்  மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள்: எம்.எல்.ஏ., ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி எடுக்கட்டாஞ்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விலை நிலங்களை பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி – சின்னூர் பேட்டை மீனவ கிராமம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட எருக்கட்டாஞ்சேரி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளிகள், குடியிருப்பு மற்றும் கடலோரப் பகுதிகள், விவசாய விளைநிலங்களை பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.,வும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க., செயலாளருமான நிவேதா முருகன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விளைநிலங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து கிராம மக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., விரைவில் நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்று கூறினார்.

ஆய்வின்போது, செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, தரங்கை பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், ராஜா, தரங்கை பேருர் தி.மு.க., செயலாளர் முத்துராஜா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், தரங்கை பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், தரங்க பேரூர் தி.மு.க., துணை செயலாளர் மதியழகன், செம்பை ஒன்றிய பொறியாளர் இளமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

66 + = 73