
மயிலாடுதுறை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம் தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடியில் நடைபெற்றது.
இதில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தின் முடிவில் ஒரு வார காலத்திற்கு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 600 கண் வலையை பயன்படுத்தக்கூடாது எனவும், விரைவில் சிறு தொழில்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை ஆணையரிடம் வலியுறுத்துவது எனவும், மேலும் மீன்வளத்துறையின் தொடர் சோதனை நடவடிக்கையால் சிறுதொழில் பாதிக்கபட்டால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இணைந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.