புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் சித்திரை முதல் நாள் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ ஜெயவிளங்கி அம்மன் கோயிலில் காலை எட்டு மணியளவில் அபிஷேக ஆராதனையும் 11 மணியளவில் அரிமளம் சாஸ்தா காங்கிரட் நிருவணத்தார் முருகேசன் ஏற்பாட்டில் அருசுவை அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர், அரிமளம் வர்த்தக சங்கம் சார்பில் மார்கெட் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை இரவு எட்டு மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.