‘அமராவதி’ அர்ஜுன் தொடங்கி ‘வலிமை’ அர்ஜுன் என கதாப்பாத்திர பெயர்கள் அமைந்தாலும் தமிழ் சினிமாவில் 31 ஆண்டுகளாக, ஒரு ‘ஏகலைவன்’ போல் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டே இருக்கிறார் அஜித்.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ‘வருங்கால முதல்வரே…பிரதமரே… ஜனாதிபதியே…’ என்றெல்லாம் ரசிகர் மன்றங்களை உருவாக்கி கட்-அவுட், போஸ்டர்கள், பாலாபிஷேகம் என ஓவர் பில்ட் அப் கொடுத்து பொதுமக்களை ரணகளமாக்கிக் கொண்டிருக்கும் காலமிது. ஆனால், ரசிகர்களையும் மன்றங்களையும் உருவாக்கவில்லை அஜித். அவரது நடிப்பால், உழைப்பால் எல்லாமே தானாக உருவானது. அதனாலேயே, என்னவோ தனக்கு விஸ்வாசமான ரசிகர்களுக்கு மேலும் விஸ்வாசமாக இருக்க நினைத்தார் அஜித்.

அதேபோல், சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடியுடன் நடிக்க யோசிப்பார்கள். ஆனால், அந்த கெட்-அப்பிலேயே நடித்து செம்ம ஹிட் கொடுத்தவர் அஜித். அதனால்தான், இவர் தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட தன்னம்பிக்கையாளர். அந்த, மாபெரும் தன்னம்பிக்கையாளர் இன்று 51 வது பிறந்தாளைக் கொண்டாடுகிறார். வெற்றிச் சாதனைகள் இன்னும் அவரைப் பின் ‘தொடரும்’… ஹேப்பி பர்த்டே அஜித்!