தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்ள தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மழைகாலம் முடிந்து தற்போது கோடை காலம் ஆரம்பிக்க உள்ளது. தற்போதே தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயில் காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இனி வரும் காலங்களில் அதிக அளவில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் அதை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொது மக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணிகள் முடிந்த வரை வீடுகளுக்குளே இருக்க அறிவுத்தப்படுகிறார்கள். உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டல் மருத்துவர்களை அணிகி சிகிச்சை பெற வேண்டும். வெயிலில் செல்ல வேண்டியுருந்தால் குடை, உடலி முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதீத வெப்பதால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு ஆகியவை தினசரி பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.