தமிழ்நாட்டில் புதிய கொரோன வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதிய கொரோன வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள 11,000 அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டமைப்புகள் குறித்த ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு சார்பில் 78 இடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் தயார்நிலையில் உள்ளன. சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் தென்படுவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் மருந்து இருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையின் பாதிப்பு வீரியமாக இல்லை. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற நிலை தற்போது இல்லை. தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பு இல்லை; தனித்தனியே பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 24,500 ஆக்சிஜன் வெண்டிலேட்டர்கள் உள்ளன. 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளன. என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 4 =