
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடமேற்கு, கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாளை நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.
டெல்டா மற்றும் வடமாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலின் ஒருசில இடங்களிலும் ஒருசில இடங்களிலும் லேசான மழை பெய்யும். நாளை மறுநாள் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்குதொடர்ச்சி மழையை ஒட்டிய மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதால் நாளை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.