தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது- பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருப்பதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பேசினார். பழைய ஓய்வூதிய திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாகவும், 4 அரசுகள் மாறியும் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றும் கூறினார்.

விலைவாசிக்கு ஏற்ப அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஆனால், நிதி நிலைமை மந்த நிலையில் இருப்பதால் அதனை நிறைவேற்ற முடியவில்லை எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருப்பதாக தெரிவித்த அவர், பல விஷயங்களில் முடிவெடுக்க முடியாத சூழல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்