
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் 24ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் சார்பில் ஆயிரம் புதிய வணிகர்களை உறுப்பினராகும் பணி நடக்க உள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கும் பணிகளை தொடங்கி உள்ளோம், மாநில அரசுத் துறை அதிகாரிகள் வரி வசூலிப்பதில் திண்டுக்கல்லில் கடுமையான நெருக்கடி கொடுத்து வருகின்றனர், வியாபாரிகள் மற்றும் வணிகர்களை அச்சுறுத்தி வரி வசூலிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், லைசென்ஸ் மற்றும் வரி விதிப்பு நியாயமான முறையில் வெளிப்படையாக இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் பேரூராட்சி, உள்ளாட்சி, அறநிலைத்துறை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் கொரோனா காரணமாக முழுமையாக மூடப்பட்டு உள்ளது அந்த கடைகளுக்கு வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சரை சந்திக்க உள்ளோம் , ஜிஎஸ்டி தொடர்பாக வணிகர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது இதனால் பல வியாபாரிகள் மன உளைச்சலில் உள்ளனர் இதற்கு சமாதான கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சமாதான கமிட்டி அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு வருமாணம் அதிகரிக்கும் பெட்ரோல் விலையை மாநில அரசு 3 ரூபாய் குறைத்துள்ளது. மத்திய மாநில அரசுகள் இணைந்து டீசல் விலையையும் குறைக்க வேண்டும், டீசல் பெட்ரோல் விலை குறைந்தால் மற்ற பொருள்கள் விலை குறையும், மத்திய அரசு டீசல் விலையைக் கணிசமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம், கொரோனா காலத்தில் அரசுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க போராட்டம் தேதியை அறிவிக்காமல் இருந்தோம், பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருந்தால் அனைத்து மாவட்டத்திலும் போராட்டம் நடத்தப்படும்,
விலைவாசி உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் இரண்டும் தான் காரணம், ஆனால் மாநில அரசு பதவியேற்று மூன்று மாதங்கள் ஆகிறது இந்த பட்ஜெட்டில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் உள்ளிட்ட பல திட்டங்களை செய்து வருகிறது தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் காரணமாக விலைவாசி குறையும் வாய்ப்புள்ளது, அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் ஒரு கோடிக்கு மேல் வருவாய் வருவதால் சம்பளம் வாங்காத அரசு ஊழியர்களாக வணிகர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பதை குறிப்பிட்டு காட்டக் கடமைப்பட்டுள்ளோம் ,
அண்டை மாநிலமான கேரளாவில் வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது போல தமிழகத்தில் உள்ள வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என்று இவ்வாறு கூறினார்.