தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வடகாட்டில் பெரியார் பிறந்தநாள் கவியரங்கு

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் பெரியார் பிறந்த நாள் கவியரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கவியரங்கிற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் எஸ்.டி.பஷீர் அலி தலைமை வகித்தார். பெரியாரிய கருத்துரையாளர் கரு.காளிமுத்து கவியரங்கைத் தொடங்கி வைத்தார்.

கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் தலைமையில் கவிஞர்கள் சு.மதியழகன், மைதிலி, கீதாஞ்சலி, மு.ராஜா, புத்திரசிகாமணி ஆகியோர் கவிதை வாசித்தனர். மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. திக மாவட்டத் தலைவர் அறிவொளி, மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியராஜ்,சங்கத்தின் நிர்வாகிகள் தமிழரசன், செல்வி, மனோன்மணி, கோகுல் , தமிழ்குமரன், துரைராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கிளை நிர்வாகிகள் ‘அறிவொளி” கருப்பையா வரவேற்றார். தங்க.திருப்பதி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

34 − = 29