தமிழ்நாடு பிராமண சமாஜம் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் சோபகிருத வருஷ பஞ்சாங்கம் வெளியீட்டு விழா கீழ 5ம் வீதியில் உள்ள மாவட்டத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. சோபகிருத வருஷ பஞ்சாங்கத்தை இண்டேன் ஸ்ரீதர் வெளியிட மலையப்பன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மாவட்ட தலைவர் தியாகராஜன், தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரசாத் வரவேற்புரையாற்றினார். இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீதரன் நன்றி கூறினார். மேலும் இந்நிகழ்வில் குரு ஸ்ரீராம், மகளிர் அணி செயலாளர் ஸ்ரீவித்யா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் புதிய நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர்.