தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி மன நிறைவுடன் நாளை ஓய்வு பெறுகிறார் கண்காணிப்பாளர் சேகர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி மன நிறைவுடன் நாளை ஓய்வு பெறும் கண்காணிப்பாளர் பி.சேகர் குறித்து ஒரு பார்வை:

தனது முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும், முன்னோடியாக திகழ்ந்து தொடக்க நிலையில் தாலுக்கா அலுவலகத்தில் தட்டச்சராகவும், புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டக சாலையில் சுமார் மூன்று ஆண்டுகள் பணியாற்றி. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நகர, கிராமப்புற மக்களின் பசிப்பிணியை போக்கிடும் வகையில் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தட்டச்சர் நிலையிலிருந்து படிப்படியாக தனது சிறப்புமிக்க ஆற்றலாலும், அர்ப்பணிப்பு தன்மையால் சிறப்பு நிலை கண்காணிப்பாளராக பணியாற்றி. அலுவலகத்தில் எந்த பிரிவானாலும் தனக்கு தெரிந்த வேலைகளை சக ஊழியர்களுக்கும் கற்றுக்கொடுத்து நல் வழிகாட்டியாக திகழ்ந்த சேகர். வயது முதிர்வின் காரணமாக கண்காணிப்பாளர் கழகத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி அனைத்து நிலை அலுவலர்களுக்கும் முன்மாதிரியாக இருந்து நாளை பணி ஓய்வு பெறுகிறார்.

அரசுப்பணி மட்டுமில்லாது பொதுசேவை இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அரசியல் புயல் ஆயிரம் அடித்தாலும் அசையாத ஆலமரமாய் கழக தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக தொடங்கி தனது கொள்கைப்பிடிப்பாள் இன்று புதுகை மாவட்ட மண்டல பொருளாளராக தன்னை நிலைப்படுத்திக்கொண் டுள்ளதுடன். புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கத்தில் நிர்வாக செயலாளராகவும், கிறிஸ்துவ தேவாலயத்தில் ஆலய பணிகளிலும் தனது செயல்பாட்டினை விரிவு படுத்திக்கொண்டுள்ளார்.

பணி ஓய்வுக்கு புன்னரும் பல்வேறு சமூக நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு குடும்பத்தினருடன் என்றென்றும் நலமுடன் வாழ அவருடன் பணியாற்றிவரும் அலுவலர்கள் விரும்புகின்றனர். நாளை மாலை மண்டல அலுவலகத்தில் நடைபெறும் பணி ஓய்வு நிறைவு பாராட்டு விழாவிற்கு மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி சேகர் மற்றும் சேதுராமன், அருங்குளவன், கருணாநிதி, மாரிமுத்து ஆகிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் பண பலன்களை வழங்கி கௌரவப்படுத்துகிறார். இந்த நிகழ்விற்கு துணை மண்டல மேலாளர் அரசு, துணை மேலாளர் கணக்கு பாரி, தரக்கட்டுப்பாடு மேலாளர் பன்னீர்செல்வம், வணிக பிரிவு உதவி மேலாளர் ஜெய குரு ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துகின்றனர். நிகழ்ச்சியினை நிர்வாகப் பிரிவு கண்காணிப்பாளர் மணிமாறன் தொகுத்து வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

51 + = 58