தமிழ்நாடு நாடார் உறவின் முறை கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டம், அகரக்கட்டில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு ஆலோசனை  கூட்டம் நடை பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். இதில் அகரக்கட்டு லூர்து நாடார்  தலைவராகவும், ஆனந்த் காசிராஜன்  பொதுச் செயலாளராகவும், சுப்பிரமணியன்  பொருளாளராகவும்,  குருசாமி. ராஜ் நைனார் துணை தலைவராகவும், அரிகிருஷ்ணன் ஜாண் டேவிட் துணை செயலாளராகவும், முத்து நைனார் திரவியம் பொதுக்குழு உறுப்பினராகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பொன்னாடை  அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்று  கொண்ட அகரக்கட்டு லூர்து நாடார் பேசும்போது. உறவின்முறைகள் அனைத்தையும் ஒன்று சேர்க்கின்ற விதமாக நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். ஒவ்வொரு உறவின் முறையும் மற்ற உறவின் முறைகளோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அனைத்து உறவின் முறைகளையும் ஒன்றிணைக்கின்ற பணியை தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு செய்யும்.  மேலும் பெருந்தலைவர் காமராஜர் நமக்கு விட்டுச் சென்ற கல்விப் பணியை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மிகச் சிறப்பாக செயல்படுவோம் . மேலும்  உறுப்பினர்களுக்கு ஆயுள் சந்தாவாக  ரூ 250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த அமைப்பு ஒரு குடும்ப அமைப்பாக நிச்சயமாக செயல்படும். நாம் அனைவரும் ஒரே குடும்பமாக தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 87 = 92