
தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜருடைய திரு உருவச்சிலைக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொருளாளர் சுப்பிரமணியன் தென்காசி மாவட்ட துணை தலைவர் திருமலை குமார் இந்த நாடார் வாலிபர் சங்க துணை தலைவர் ராம்குமார் செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.