
1967 ஜூலை 18, மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2022 முதல் இந்த நாளை தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி மாணவர்களிடைய விழிப்புணர்வு ஊட்டும் நோக்கில் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பேரணிக்கு பள்ளி முதல்வர் சிவப்பிரகாசம் தலைமை வகித்து தமிழ்நாடு தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ப.சரவணன், துணை முதல்வர்கள் இன்பராஜ், ரவி. மற்றும் ஆசிரியர்கள், பிரபு, சித்ரா, செல்வன் உடற்கல்வி ஆசிரியர் சரவணன் ஆகியோர் பேரணியில் பங்கேற்றனர்.