தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற புதிய தலைவராக சந்திரசேகர் நியமனம்

தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

2016 முதல் 2021 வரை வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் வாகை சந்திரசேகர். 1991ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 2003ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றவர் சந்திரசேகர். இவரை தற்போது தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நியமித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்தவும், தமிழக கலைகளை பாதுகாத்து வளர்க்கவும், தமிழக அரசின் திட்டங்களால் கலைஞர்கள் பலனடையச் செய்யவும், பல்வேறு கலை பணிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தவும் வாகை சந்திரசேகரை தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நியமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் கவனிப்பார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 2 =