தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாள விடுதியில் உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு முத்துராமன் தலைமை வகித்தார், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற்றார், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் துரையரசன் மற்றும் கந்தர்வக்கோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா ஆகியோர் கலந்து கொண்டு உலக புவி தினம் குறித்து பேசியதாவது 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ந் தேதி சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான ஆதரவை காட்டுவதற்காக உலகம் முழுவதும் உலக புவி தினம் அனுசரிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு புவி தினத்தின் கரும்பொருள் எங்கள் கிரகத்தில் முதலீடு செய்யுங்கள் என்பதாகும்,   புவி தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது, இது பூமி ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வளிமண்டலத்தை வழங்குகிறது என்பதை மக்களுக்கு நினைவூட்டுகிறது. மேலும் அதை நம்மை கவனித்துக் கொள்வது போல் நாம் அதை கவனித்துக் கொள்வது முக்கியம் இந்த நாளின் முக்கிய நோக்கம் கிரகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதன் நிலையை மேம்படுத்த நாம் என்ன செய்ய முடியும் என்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும்.

எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, கார்பன் வெளியேற்றும் வாகனத்திற்கு பதிலாக மின்சார வாகனங்கள், சைக்கிள் பயன்படுத்துவது, பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணிப்பைகளை உபயோகிப்பது, மரங்களை நடுவது, மறு சுழற்சி செய்த பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கையை பாதுகாத்திட முடியும். பசுமையான, வளமானதாக இந்த பூமியை மாற்ற அரசாங்கமும், பொதுமக்களும் செயல்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். எனவே இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களோடு நாமும் ஒன்றிணைந்து, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க முயற்சிப்போம். இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் நமது பூமியின் இயற்கை வளங்களை நம்முடைய சந்ததியினருக்கு அளிக்க இந்த நாளில் உறுதியேற்போம்.