தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா,புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் நடத்தியது.

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசியர்களை கௌரவிக்கும் விழாவினை புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ஏஎன்எஸ் பிரைடு ஹோட்டலில் நடத்தியது.

இந்நிகழ்விற்கு சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமையேற்று அனைவரையும் வரவேற்று பேசினார்.புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தேசிய நல்லாசிரியர், தமிழ்ச்செம்மல் கவிஞர்.தங்கம்மூர்த்தி, மௌண்ட் சியோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயக்குனர் டாக்டர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ரோட்டரி மாவட்டம் 3000த்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, துணை ஆளுநர் சிவாஜி, சங்கத்தின் பொருளாளர் கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் இந்நிகழ்வில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு இரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு நலன் துறை அமைச்சர் மாண்புமிகு மெய்யநாதன், இராஜ்ய சபா உறுப்பினர் அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.முத்துராஜா ஆகியோர் கலந்துகொண்டு விருதுபெற்ற ஆசிரியர்களை பாராட்டினார்கள்.இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களான கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மெ.கோவிந்தராஜ், கே.வி.கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ந.செல்வக்குமார், லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செ.ஆண்டனி, மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் த.இராமர், காயாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.செந்தில்குமார், மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சி.ஷோபா, கவரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் மு.மீனா, ஆவணத்தான்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப.கலைச்செல்வி, செட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கி.லீமாரோஸ்லிண்ட், மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அ.கிறிஸ்டி, கற்பக விநாயகா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் இ.ஷானுரிஜ்வான் ஆகியோர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

சங்கத்தின் ஆசிரியர்களான அன்னை பார்த்திபன் (மருத்துவம்), டாக்டர்.பிரபாகரதாஸ் (மருத்துவம்), ஓவியர் ரவி (ஓவியம்), சாலமன் ஜெயச்சந்திரன் (இசை), கோபிநாத் (கணினி), மனோகரன் (தற்காப்பு கலை) பாலமுருகன் (கணினி) ஆகியோர்களை கௌரவ விருந்தினர்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் கவிஞர்.தங்கம்மூர்த்தி, மௌண்ட் சியோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனர் டாக்டர்.ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் ஆகியோர் கௌரவித்து பாராட்டி பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள், ரோட்டரி உறுப்பினர்கள், விருதுபெற்ற ஆசிரியர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 21 = 29