தமிழினத்துக்காக தொடங்கியது தான் திமுக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுகவை போல் வெற்றி பெற்ற கட்சியும் இல்லை, தோல்வியடைந்த கட்சியும் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கோவை சென்றுள்ளார். அங்கு மாற்றுகட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, திமுகவை போல் வெற்றிபெற்ற கட்சியும் இல்லை, தோல்வியடைந்த கட்சியும் இல்லை. இந்திரா காந்தியின் எச்சரிக்கையை மீறி நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி. ஆட்சியை பற்றி கவலைப்படாமல் ஜனநாயம், மக்களுக்காக குரல் கொடுத்தவர் கருணாநிதி. சொல்லாமல் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்.

நாடாளுமன்ற தேர்தல் பணியை தற்போதே தொடங்க வேண்டும். திமுக ஆட்சி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது 2024 மக்களவை தேர்தலும் திமுக கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். ஆட்சிக்காக திமுகவை அண்ணா தொடங்கவில்லை. தமிழினத்துக்காக தொடங்கியதுதான் திமுக இயக்கம். முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியைத் தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின. சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இன்று முதலே உழைக்க வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

31 + = 40