தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் சார்பில் செங்குன்றம் பகுதியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசினை கண்டித்து நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ ஆணைக்கிணங்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில துணை அமைப்பு செயலாளரும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளருமான இரா. கார்த்திகேயன்  தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தொழிற்சங்க செயலாளர் கு.ஜம்புலிங்கம் மற்றும்‌ மாநில துணைப் பொதுச் செயலாளர் வேணுகோபால் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் வடக்கு மாவட்ட அமைப்பாளர் மீ.ம.சங்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கீதா புருஷோத்தமன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் நேமலூர் செல்வம், வடக்கு மாவட்ட அமைப்பாளர் விஸ்வநாதன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் சிந்தனை மூர்த்தி, மீஞ்சூர் ஒன்றிய தலைவர் ஹரிதாஸ், செங்குன்றம் நகர தலைவர் செல்வம், கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ்வரன், திருவொற்றியூர் நகர இளைஞரணி நந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் செங்குன்றம் நகர செயலாளர் அம்ஜத் ஷெரீப் அனைவரையும்‌ வரவேற்றார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை பேச்சாளர் மாரிமுத்து கண்டன உரை ஆற்றினார். திருவள்ளூர் மாவட்டத்தின் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகளும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி சுதாகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரேம் குமார் நன்றி கூறினார்.