தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி.ராகவன் விலகல்

தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கே.டி.ராகவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ ஒன்று இன்று காலை வெளியான நிலையில் அவர் தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன். என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 2