தமிழக தேர்தல் வெற்றிக்காக 4 பா.ஜ.க மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு

சட்டப்பேரவை தேர்தலில் பா..கவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்காக பாடுப்பட்ட 4 மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சி சார்பில் இன்னோவா கார் பரிசளிக்கப்பட்டது.

 தேர்தலுக்கு முன்பே, தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுதரும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.கவுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்று உள்ளனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.கே.சரஸ்வதி, எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர். அதன்படி,கோவை, நெல்லை, ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த நந்தகுமார், மகாராஜன், சுப்ரமணியன், தர்மராஜ் ஆகிய 4 மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்று இன்னோவாவை வழங்கினர்.