ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு ஆயத்தமாகி விட்டது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூட தற்போது எதிர்த்து கேள்வி கேட்பதில்லை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஆட்சியை பாராட்டி வருகின்றனர் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழாவில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசி எதிர்கட்சிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை அருகே கோவில்பட்டியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திக்மெஸ் மூர்த்தி, அதிமுக சார்பில் புதுக்கோட்டை எம்பி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.புதிதாக கட்சியில் இணைந்த அவர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுக கரை பதிக்கப்பட்ட வேட்டிகளை வழங்கி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.பின்னர் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் :

ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு ஆயத்தம் ஆகிவிட்டது, சட்டமன்றத்தில் யாரும் எதிர்த்து பேசவில்லை, வெளிநடப்பு மட்டுமே செய்து வருகின்றனர், மேலும் அதிமுக சட்டமன்ற கொரோடா உள்ளிட்ட பலரும் அரசை பாராட்டி வருகின்றனர், திமுக கொடுத்த பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.எதுவும் நிரந்தரம் அல்ல ஆனால் இதேபோல் தமிழக முதலமைச்சர் ஆட்சி நடத்தினால் அடுத்த தேர்தலில் ஒட்டுகேட்கவே தேவையில்லை மக்களே வெற்றி பெறசெய்வார்கள், என்று கூறிய அவர் கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தற்கு காரணம் மு.க.ஸ்டாலின் தான் என்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரின் குளறுபடியால் திமுக வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார் அது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது விரைவில் நல்ல முடிவு வரும்.தமிழக முதல்வரின் செயல்பாட்டால் சட்டபேரவையில் எதிர்கேள்விகளே தற்போது இல்லை, எதிர்கட்சியினரும் இந்த ஆட்சியை புகழ்ந்து வருகின்றனர் இந்த 3 மாத திமுக ஆட்சியின் செயல்பாட்டால் இந்திய அளவில் முதல்வருக்கே முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்றார்.முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மராத்தான் போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டு முடிந்தன. இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரத்தில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பரிசுகள் மற்றும் பதக்கங்களை அணிவித்து வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். திமுக வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள் ரகுபதி , மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் மாநிலங்களவை உறுப்பினர் எம். எம்.அப்த்துல்லா,புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மற்றும் திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.



உதயநிதியின் நாளைய நிகழ்வு
நாளை காலை 8.45 மணிக்கு புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கிவைக்கிறார். அதை தொடர்ந்து 9.30 மணிக்கு ஆலங்குடியில் தனியார் மருத்துவமனையை தொடங்கிவைக்கிறார். பின் வாணக்கன்காட்டில் காலை 10 மணி அளவில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பாஞ்சாலன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். பின் 11 மணிக்கு கறம்பக்குடியில் ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமை திறந்து வைக்கிறார். அதை தொடாந்து காலை 11.40 மணி அளவில் கந்தர்வக்கோட்டையில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். பின் பகல் 12 மணிக்கு முன்ளாள் புதுக்கோட்டை எம்.எல்.ஏ மாரியய்யா நினைவு மண்டபத்தையும் திறந்து வைக்கிறார். அதன்பின்பு அங்கிருந்து கார் மூலம் திருச்சி செல்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைதரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



