தமிழக கோவில்களில் மொட்டை அடிக்க இலவசம் : உள்ளிருப்பு போரட்டத்தில் இறங்கிய பழனி மொட்டை அடிக்கும் ஊழியர்கள்

பழனி முருகன் கோவிலில் முடி எடுக்கும் தொழிலாளர்கள் (சரவணப்பொய்கை) தமிழக அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் வளாகத்தில் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களிலும் முடி எடுக்க இலவசம் என தமிழக அரசு அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவித்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி மலைக்குட்பட்ட (சரவண பொய்கை) முடி எடுக்குகும் ஊழியர்கள் இலவசமாக மொட்டை அடிப்பதால் எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லையென்றும், இதற்கு முறையாக தேவஸ்தானம் மாத சம்பளம் வழங்க வேண்டும் அல்லது தமிழக அரசு தலையிட்டு எங்களுக்கு மாத சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை தமிழக அரசின் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் முடி எடுத்துக்கொள்ள அதாவது மொட்டை அடித்துக் கொள்ள பல்வேறு முறைகளில் தேவஸ்தானம் பக்தர்களிடம் பணங்களை பிடுங்கியுள்ளது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன.

தற்பொழுது தமிழக அரசு முடிக்காணிக்கை விஷயத்தில் முற்றிலும் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருப்பதால் பலருக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் ஒன்றுதான் பழனி முருகன் கோவிலில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போதிய வருவாய் இல்லை என்ற குற்றச்சாட்டு. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்போது அவர்கள் மாத சம்பளத்தை கேட்டு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை கணிவுடன் பரிசீலனை செய்து நிறைவேற்றிட வேண்டும் என்பது சமூகத்தின் மீது பற்று கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 59 = 60