தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்

சென்னையில் இருந்து இன்று டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசுகிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார்.

தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்த என்ஐஏ சோதனையைத் தொடர்ந்து, தமிழகத்தில் கோவை, மதுரை, சேலம், மற்றும் ஈரோடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், ஆளநரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 2 =