தமிழக அளவிலான டென்னிஸ் போட்டியில் எம்ஆர் கல்லூரி இரண்டாவது  இடம்

தமிழக அளவிலான டென்னிஸ் போட்டியில் எம்ஆர் கல்லூரி இரண்டாவது இடம் பெற்றுள்ளது இதுபற்றி தத்தனூர் எம்ஆர் கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் விளையாட்டு போட்டிகள், கோயம்புத்தூர் மாருதி உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

அதில் முதல் சுற்றில்  ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியை, 6-0 என்ற புள்ளி கணக்கில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகில் உள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி உடற்கல்வியியல் கல்லூரி வெற்றி பெற்றது. இரண்டாவது சுற்றில்  செயின்ட் ஜான் உடற்கல்வியியல் கல்லூரியை 6-0 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

அதைத்தொடர்ந்து மூன்றாவது சுற்றில் டிஎன்பிஇஎஸ்யூ கல்லூரியை, 6-0 என்ற புள்ளி கணக்கில் வென்றது. தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில், மாருதி உடற்கல்வி கல்லூரியுடன் போட்டியிட்டு, 3-6 என்ற புள்ளி கணக்கில், மாநில அளவில் தத்தனூர் மீனாட்சி இராமசாமி உடற்கல்வியியல் கல்லூரி அணி இரண்டாம் இடம் பெற்றது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள் தாளாளர் எம்.ஆர். இரகுநாதன் ரூபாய் 15,000/- ரொக்கப்பரிசு வழங்குவதாக அறிவித்து பாராட்டினார். முன்னதாக விளையாட்டுத்துறை பேராசிரியர்கள்  அன்பழகன், திருமுருகன், ஜெயபால், இராஜசுதாகர், சுரேஷ்குமார், மற்றும் கண்ணகிதேவி ஆகியோர் சிறப்பாக பயிற்சி அளித்திருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.